ரூபாய் நோட்டு விவகாரம் மத்திய அரசை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் அறிவிப்பு


ரூபாய் நோட்டு விவகாரம் மத்திய அரசை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Dec 2016 4:16 AM IST (Updated: 29 Dec 2016 4:16 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சியின் 132–வது நிறுவன நாள் நேற்று மும்பையில் கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து, தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவான் பேசியதாவது:– புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழக்கப்பட்டு 50 நாட்கள் ஆகிவிட்டது. இரு

மும்பை

காங்கிரஸ் கட்சியின் 132–வது நிறுவன நாள் நேற்று மும்பையில் கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து, தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவான் பேசியதாவது:–

புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழக்கப்பட்டு 50 நாட்கள் ஆகிவிட்டது. இருந்தாலும், பிரதமர் மோடி உறுதி அளித்தது போல், பொதுமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. கஷ்டங்கள் தொடர்கிறது. நடைமுறை நிலவரங்கள் வித்தியாசமாக இருக்கிறது.

ஊழல் குற்றச்சாட்டு பற்றி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கேட்ட கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். ரூபாய் நோட்டு பிரச்சினையில் 50 நாட்கள் முடிந்த பின்னரும் பொதுமக்கள் இடர்பாடுகளை சந்தித்து வருகிறார்கள்.

இதனை வலியுறுத்தி ஜனவரி முதல் வாரம் காங்கிரஸ் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அசோக் சவான் தெரிவித்தார்.


Next Story