கொசு மருந்து அடிக்க சென்ற மாநகராட்சி ஊழியரின் கையை கடித்தவர் கைது
மதுரை மாநகராட்சி பணியாளர்கள் வில்லாபுரம், ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் கொசு மருந்து அடிக்க சென்றனர். அப்போது கார்மேகம்(வயது 59) என்பவர் வீட்டிற்கு சென்ற போது, அவரது மனைவி பஞ்சவர்ணம் அவர்களை தடுத்து நிறுத்தினார். மேலும் தங்கள் வீட்டில் கொசு மருந்து அடிக்
அவனியாபுரம்,
மதுரை மாநகராட்சி பணியாளர்கள் வில்லாபுரம், ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் கொசு மருந்து அடிக்க சென்றனர். அப்போது கார்மேகம்(வயது 59) என்பவர் வீட்டிற்கு சென்ற போது, அவரது மனைவி பஞ்சவர்ணம் அவர்களை தடுத்து நிறுத்தினார். மேலும் தங்கள் வீட்டில் கொசு மருந்து அடிக்க தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
இதனால் மாநகராட்சி ஊழியர்களுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மாநகராட்சி ஊழியர் ஒருவரின் கையை கார்மேகம் கடித்து விட்டு, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார் கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கார்மேகத்தை கைது செய்தனர்.
Next Story