வாடிக்கையாளரை நம்பும் கடை
இந்தியாவின் மும்பை நகரில் இரண்டு புதிய வகை சூப்பர் மார்க்கெட்டுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தியாவின் மும்பை நகரில் இரண்டு புதிய வகை சூப்பர் மார்க்கெட்டுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இங்கே விற்பனைப் பிரதிநிதிகள் கிடையாது. கல்லாப்பெட்டியும் கிடையாது. நமக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு, ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வேண்டுமாம். இங்கு மிக மிகக் குறைந்த ஆட்களே கடையில் இருக்கிறார்கள். எந்தப் பொருட்களை எடுத்தாலும் கேள்வி கேட்க மாட்டார்கள். எடுத்த பொருட்களுக்குப் பணம் செலுத்தாவிட்டாலும் விசாரிக்க மாட்டார்கள். ஏனெனில் மக்கள் நேர்மையாக இருப்பதற்காகவே இந்த சூப்பர் மார்க்கெட்டுகளை ஆரம்பித்திருக்கிறோம் என்கிறார்கள் உரிமையாளர்கள்.
யார் கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும் நேர்மையாக இருப்பதுதான் உங்களின் அடிப்படைக் குணம். அதை நாங்கள் நம்புகிறோம். எங்கள் நம்பிக்கையை நிச்சயம் நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்கிறார்கள் கடை நிர்வாகிகள்.
# நம்பிக்கை... அது தானே எல்லாம்..!

Next Story