மார்ச் மாதம் நடைபெறும் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் வருகிற 4–ந்தேதி கடைசி நாள்


மார்ச் மாதம் நடைபெறும்  10–ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் வருகிற 4–ந்தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 30 Dec 2016 4:15 AM IST (Updated: 29 Dec 2016 6:36 PM IST)
t-max-icont-min-icon

வருகிற மார்ச் மாதம் நடைபெறும் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் வருகிற 4–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு சிவகங்கை மாவட்ட ம

சிவகங்கை,

வருகிற மார்ச் மாதம் நடைபெறும் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் வருகிற 4–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

10–ம் வகுப்பு பொதுத்தேர்வு

சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி செந்திவேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

வருகிற மார்ச் 2017–ல் நடைபெறவுள்ள 10–ம் வகுப்பு பொது தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய தனித்தேர்வர்கள் வருகிற 4–ந்தேதிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். நேரடி தனித்தேர்வர்கள் அனைவரும் பகுதி–1–ல் மொழிப்பாடத்தில் தமிழ் பாடத்தை மட்டுமே முதல் மொழிப்பாடமாக தான் கண்டிப்பாக தேர்வெழுதுதல் வேண்டும். முதன் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் நேரடி தனித்தேர்வர்கள் 1–3–2017 அன்று 14 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மேலும் மத்திய–மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8–ம் வகுப்பு தேர்வில் ஆங்கிலம் மொழிப்பாடத்துடன் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ–மாணவிகள் மற்றும் 9–ம் வகுப்பு பயின்று இடையில் நின்ற மாணவ–மாணவிகளும் தேர்வுத்துறையால் நடத்தப்படும் 8–ம்வகுப்பு பொதுதேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியுடையவர்களாவர்.

விண்ணப்பிக்கலாம்

மேலும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கல்வி காப்புறுதி திட்டத்தின் கீழ் பயின்று 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக மாற்று சான்றிதழ் பெற்றவர்கள், உண்டு உறைவிட பள்ளியில் 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்று மாற்று சான்றிதழ் பெற்றவர்கள், திறந்தவெளி பள்ளியில் ‘சி‘ சான்றிதழ் பெற்றவர்கள், பள்ளிசாரா கல்வித்திட்டத்தின் கீழ் 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக மாற்று சர்ன்றிதழ் பெற்றவர்களும் தகுதியுடையவர்கள் ஆவர். அதேபோல் 14 வயது பூர்த்தி செய்த உழைக்கும் சிறார் கல்வி திட்டத்தின் கீழ் தொழிலாளர் அமைச்சகம் இந்திய அரசின் கீழ் வழங்கப்பட்ட பள்ளிசாரா கல்வி மாற்று சான்றிதழ் பெற்றவர்கள் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த கல்வித்தகுதி பெற்ற தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை பயிற்சிக்கு ஏற்கனவே பதிவு/பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே 10–ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story