மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் எந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் மலர்விழி தகவல்
தையல் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் விலையில்லா மின் மோட்டாருடன் கூடிய தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– விலையில்லா தையல் எந்
சிவகங்கை,
தையல் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் விலையில்லா மின் மோட்டாருடன் கூடிய தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
விலையில்லா தையல் எந்திரம்மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தையல் பயிற்சி முடித்துள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் வாய்பேச இயலாத, செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிய உதவும் வகையில் விலையில்லா மின் மோட்டாருடன் கூடிய தையல் எந்திரங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் தையல் எந்திரம் பெற விரும்புபவர்கள் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் சான்று அல்லது தனியார் நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதேபோல் பிற அரசு துறையில் தையல் எந்திரம் பெற்றிருக்கக் கூடாது.
விண்ணப்பிக்கலாம்எனவே தகுதியும், விருப்பமும் உடைய, இந்த திட்டத்தின்கீழ் இதுநாள் வரை பயன்பெறாத, சுயதொழில் புரிய விருப்பமுள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம். மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வருகிற 5–ந்தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ள நேர்முக தேர்வில், மேற்காணும் சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.