திருப்பத்தூரில் போக்குவரத்துக்கு இடையூராக திரியும் மாடுகள்
திருப்பத்தூர் நகர் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சாலையில் மாடுகள் திருப்பத்தூர் நகர் பகுதியில் மாடுகள் வளர்ப்போர் அவற்றை தொழுவத்தில் கட்டி போடாமல் சாலைகளில் அவழ்த்து விடுகின்றனர். இதனால் மாடுகள்
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் நகர் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
சாலையில் மாடுகள்திருப்பத்தூர் நகர் பகுதியில் மாடுகள் வளர்ப்போர் அவற்றை தொழுவத்தில் கட்டி போடாமல் சாலைகளில் அவழ்த்து விடுகின்றனர். இதனால் மாடுகள் திருப்பத்தூர் நான்கு ரோடு, பஸ் நிலையம், அண்ணாசிலை, மார்க்கெட் பகுதி, பெரியகடை வீதி ஆகிய பகுதிகளில் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. மேலும் இவை தங்கள் பசியை போக்க ஓட்டல்கள், கடைகள் முன்பு படையெடுக்கின்றன. அங்கு வாழை இலை மற்றும் மிஞ்சிய உணவு பொருள்கள், காய்கறி கடைகளில் வீணாகிப்போன கழிவுகள் இவற்றினை இரையாக உட்கொள்கின்றன. இரை தேடும் படலம் முடிந்த பின்பு அவை, முக்கிய பிரதான சாலைகளில் கூட்டம் கூட்டமாக சாலையினை அடைத்து கொண்டு திரிவதும், பஸ் நிலையம் போன்ற மக்கள் கூடும் இடங்களில் படுத்திருப்பதையும் வழக்கமாக கொண்டு இருக்கின்றன. மாடுகள் சாலைகளில் திரியும் போது போக்குவரத்திற்கு தான் இடையூராக உள்ளது. சமீபத்தில் பேரூராட்சி டிராக்டர் வந்தபோது, கன்றுக்குட்டி குறுக்கே வந்ததையடுத்து, அதன் மீது டிராக்டர் மோதியது. இதில் அந்த கன்றுக்குட்டி பரிதாபமாக இறக்க நேரிட்டது.
நடவடிக்கைஇதேபோல் அண்ணாசிலை அருகேயுள்ள சிவகங்கை ரோட்டில் கூட்டமாக திரியும் மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல் காளை மாடுகள் ஒன்றையொன்று முட்டிக்கொண்டு, நடந்து செல்லும் ஆட்கள் மீது அல்லது வாகனங்களின் மீது முட்டி சேதப்படுத்துகின்றன. எனவே சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் மாடுகள் வளர்ப்போருக்கு எச்சரிக்கை விடுத்தும், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.