தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளரிடம் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளரிடம் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். குடிநீர் தட்டுப்பாடு தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. இத
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளரிடம் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
குடிநீர் தட்டுப்பாடுதூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. இதைத் தொடர்ந்து கீதாஜீவன் எம்.எல்.ஏ. மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று, ஆணையாளரும், தனி அலுவலருமான ராஜாமணியை சந்தித்து பேசினார். அப்போது, ‘தூத்துக்குடி மாநகராட்சியில் 15 நாட்களுக்கு ஒருமுறை குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். வல்லநாட்டில் குடிநீர் எடுக்கப்படும் கிணறுகளை தூர்வார வேண்டும். அங்குள்ள மோட்டார்கள் அனைத்து பழுதுநீக்கப்பட்டு சீராக இயங்கும் நிலையில் வைக்க வேண்டும்.
ரூ.1.90 கோடி நிதிகுடிநீர் திட்ட கிணறுகளில் அதிக அளவில் தண்ணீர் ஊறுவதற்கு வசதியாக, குடிநீர் கிணறுகள் அமைத்து உள்ள பகுதியில் மணல் தடுப்பணை அமைக்க வேண்டும். இதனால் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கும். இதன் மூலம் மாநகராட்சிக்கு தேவையான தண்ணீரை பெற முடியும். தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ள பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 90 லட்சம் செலவில் பணிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
லாரி மூலம் குடிநீர்அப்போது, தனி அலுவலர் ராஜாமணி கூறும் போது, ‘குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வல்லநாட்டில் மாநகராட்சி குடிநீர் கிணறுகள் தூர்வாரப்பட்டு உள்ளன. தொடர்ந்து போதுமான குடிநீரை பெற முடியாத நிலையில், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து லாரிகள் மூலம் குடிநீரை கொண்டு வந்து மாநகராட்சி மக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஆழ்துளை கிணறுகள் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் உள்ளன, என்று தெரிவித்தார்.