வீரன் அழகுமுத்துகோன் வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும்
வீரன் அழகுமுத்துகோன் வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாதவ மகாசபை ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்தேன்பட்டியில் அகில இந்திய யாதவ மகாசவை கூட்டம் நடைபெற்றது. நாட்டாண்மை பெருமாள் தலைமை தாங்கினார். சீனிவாசகன், நவ
ஸ்ரீவில்லிபுத்தூர்,
வீரன் அழகுமுத்துகோன் வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாதவ மகாசபைஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்தேன்பட்டியில் அகில இந்திய யாதவ மகாசவை கூட்டம் நடைபெற்றது. நாட்டாண்மை பெருமாள் தலைமை தாங்கினார். சீனிவாசகன், நவநீதகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய யாதவ மகாசபை தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் சுகுமார், பொதுச் செயலாளர்நீலமுரளி, செயலாளர் சுகவனம், பொருளாளர் முருகானந்தம் மற்றும் குணா. பொட்டல்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெருமாள்தேவன்பட்டியில் அழகுமுத்துகோன் உருவச் சிலை நிறுவிட முடிவு செய்யப்பட்டது. வீரன் அழகுமுத்துகோன் வீர வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்த்திட அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவெற்றப்பட்டது. அகில இந்திய மகாசபை சார்பாக மரம் வளர்ப்பில் ஈடுபட்ட கோபால், ராமசாமி, முத்துக்குமார் உள்பட 10 பேருக்கு பரிசுவழங்கப்பட்டது.தன்னரசு நன்றி கூறினார். சங்கரநாராயணன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.