சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியல்


சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 30 Dec 2016 4:00 AM IST (Updated: 29 Dec 2016 8:50 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுக்க எதிர்ப்பு தெரிவித்து மாதனூர் பஸ் நிலையம் அருகே கூடிய அ.தி.மு.க.வினர் திடீரென மாதனூர் – ஒடுகத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மறைந்த முதல் –அமைச்சர் ஜெயலலிதாவின்

ஆம்பூர்,

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுக்க எதிர்ப்பு தெரிவித்து மாதனூர் பஸ் நிலையம் அருகே கூடிய அ.தி.மு.க.வினர் திடீரென மாதனூர் – ஒடுகத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மறைந்த முதல் –அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் கோடிக்கணக்கான அடிமட்ட தொண்டர்களின் கருத்தை கேட்காமல், நிர்வாகிகள் சசிகலாவை ஆதரிப்பதை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என கூறி கோ‌ஷமிட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் நாகராஜன், ஒன்றிய துணை செயலாளர் ஜேக்கப், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் எஸ்.கார்மேகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மோகன் உள்ளிட்ட 100–க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர்.


Next Story