திருவண்ணாமலை அருகே காப்புக்காட்டில் வனவிலங்குகளை வேட்டையாட சென்ற 3 பேர் கைது நாட்டு துப்பாக்கி, 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
திருவண்ணாமலை அருகேயுள்ள காப்புக்காட்டில் வனவிலங்குகளை வேட்டையாட சென்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வனவிலங்குகள் வேட்டை திருவண்ணாமலை அருகே உள்ள காப்புக்காடு மற்று
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருகேயுள்ள காப்புக்காட்டில் வனவிலங்குகளை வேட்டையாட சென்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வனவிலங்குகள் வேட்டைதிருவண்ணாமலை அருகே உள்ள காப்புக்காடு மற்றும் வனப்பகுதிகளில் இரவு நேரங்களில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக மாவட்ட வன அலுவலர் சுதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் வனப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் சொரக்குளத்தூர் காப்புக்காட்டில் நாட்டு துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரை வனத்துறையினர் மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் நாட்டு துப்பாக்கி, நெற்றி பேட்டரி லைட், டார்ச் லைட் ஆகியவற்றை கீழே போட்டுவிட்டு மறைவான காட்டுப்பாதையில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். அதனை வனத்துறையினர் பறிமுதல் செய்து மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய மர்ம நபர்கள் 2 பேரையும் வன ஊழியர்கள் தேடி வருகிறார்கள்.
நாட்டு துப்பாக்கியுடன்...இந்த நிலையில் நேற்று அதிகாலையில் திருவண்ணாமலையை அடுத்த கன்னமடை காப்புக்காடு வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல் ஒன்று நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச்சரகர் மனோகரன், வனவர் சீனிவாசன் மற்றும் வனக்காப்பாளர்கள் உடனடியாக கன்னமடை காப்புக்காட்டுக்கு விரைந்து சென்று, வேட்டை கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
அப்போது நாட்டு துப்பாக்கியுடன் 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் கொண்ட கும்பல் சுற்றிக்கொண்டிருந்தனர். வனத்துறையினர் அவர்களை மோட்டார் சைக்கிளுடன் மடக்கி பிடித்தனர். அப்போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
3 பேர் கைதுவனத்துறையினர் பிடிப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் 3 பேரும் திருவண்ணாமலையை அடுத்த கொளக்குடி கிராமத்தை சேர்ந்த சுந்தரராஜன் (வயது 43), சுரேஷ் (32), சுப்பிரமணி (58) என்பதும், தப்பி ஓடியவர் முருகன் (35) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் காப்புக்காட்டிற்கு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய முருகனை வனத்துறையினர் தேடி வருகிறார்கள்.
பின்னர் வனத்துறையினர் அவர்கள் 3 பேரையும் திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர்.