நாமக்கல்லில் ரூ.80 லட்சத்துக்கு பருத்தி ஏலம்


நாமக்கல்லில் ரூ.80 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 30 Dec 2016 3:45 AM IST (Updated: 29 Dec 2016 9:15 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நேற்று 4 ஆயிரம் மூட்டை பருத்தி ரூ.80 லட்சத்துக்கு ஏலம் போனது. பருத்தி ஏலம் நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வியாழக்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று கூட்டுறவு சங்க அதிகாரிகள் முன்னில

நாமக்கல்,

நாமக்கல்லில் நேற்று 4 ஆயிரம் மூட்டை பருத்தி ரூ.80 லட்சத்துக்கு ஏலம் போனது.

பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வியாழக்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று கூட்டுறவு சங்க அதிகாரிகள் முன்னிலையில் பருத்தி ஏலம் நடந்தது.

இந்த பருத்தி ஏலத்துக்கு நாமக்கல், எருமப்பட்டி, சேந்தமங்கலம், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், பவித்திரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 4 ஆயிரம் மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

ரூ.80 லட்சத்துக்கு விற்பனை

இந்த பருத்தி மூட்டைகள் ஏறத்தாழ ரூ.80 லட்சத்துக்கு ஏலம் போனது. ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்து 189 முதல் ரூ.5 ஆயிரத்து 912 வரையும், டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 124 முதல் ரூ.6 ஆயிரத்து 839 வரையிலும், சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்து 942 முதல் ரூ.6 ஆயிரத்து 300 வரையிலும் ஏலம் போனது. இந்த பருத்தி மூட்டைகளை கோவை, அவினாசி, திருப்பூர், திருச்செங்கோடு, கொங்கணாபுரம், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.

வழக்கமாக இங்கு பருத்தியை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளுக்கு பணம் உடனடியாக ரொக்கமாக வழங்கப்படும். ஆனால் தற்போது நிலவி வரும் பணத்தட்டு பிரச்சினை காரணமாக நேற்றும் விவசாயிகளுக்கு பணத்திற்கு பதிலாக காசோலை வழங்கப்பட்டது.


Next Story