விபத்து வழக்கில் ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு ஓமலூர் கோர்ட்டு உத்தரவு


விபத்து வழக்கில் ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு ஓமலூர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 Dec 2016 3:45 AM IST (Updated: 29 Dec 2016 9:22 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டம் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் கடந்த 2001–ம் ஆண்டு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றிவர் சம்பத். அப்போது தாரமங்கலத்தை அடுத்த ஆயாமரம் என்ற இடத்தில் அரசு பஸ்சும், இருசக்கர வாகனமும் மோதியது. இந்த விபத்து தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் ஓமலூர் மாஜிஸ்த

ஓமலூர்,

சேலம் மாவட்டம் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் கடந்த 2001–ம் ஆண்டு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றிவர் சம்பத். அப்போது தாரமங்கலத்தை அடுத்த ஆயாமரம் என்ற இடத்தில் அரசு பஸ்சும், இருசக்கர வாகனமும் மோதியது. இந்த விபத்து தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் ஓமலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணைக்கு சப்–இன்ஸ்பெக்டர் சம்பத் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு மீனா சந்திரா உத்தரவிட்டார். பிடிவாரண்டு பிறக்கப்பட்ட சம்பத் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story