வேதாரண்யம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பழனிசாமி ஆய்வு
வேதாரண்யம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலெக்டர் ஆய்வு நாகை மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி நேர
வாய்மேடு,
வேதாரண்யம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வுநாகை மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேதாரண்யம் ஒன்றியம் கத்தரிப்புலம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் “அம்மா உடற்பயிற்சி நிலையம்“ அமையவுள்ள இடத்தினையும், செட்டிப்புலம் முதல் அவரிக்காடு வரை குடிநீர் தேவைக்காக பைப்லைன் கொண்டு செல்வதற்கான முன்னேற்பாடு பணிகளையும், வாய்மேடு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்று நடுவதற்கான முன்னேற்பாடு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து செயல்பட வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது நாகை உதவி கலெக்டர் கண்ணன், தாசில்தார் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், ராஜரத்தினம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.