செங்குன்றம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருட்கள் குடோனில் தீ விபத்து


செங்குன்றம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருட்கள் குடோனில் தீ விபத்து
x
தினத்தந்தி 30 Dec 2016 4:30 AM IST (Updated: 30 Dec 2016 12:49 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றத்தை அடுத்த கிராண்ட்லைன் பெரியார் தெரு குடியிருப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான கம்பெனி உள்ளது. இங்கு பழைய பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி உருக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் அருகேயே பழைய பிளாஸ்டிக் பொருட்களை தரம்

செங்குன்றத்தை அடுத்த கிராண்ட்லைன் பெரியார் தெரு குடியிருப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான கம்பெனி உள்ளது. இங்கு பழைய பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி உருக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் அருகேயே பழைய பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரிப்பதற்கான குடோன் உள்ளது. அங்கு ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

நேற்று மாலை இந்த குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் செங்குன்றம் தீயணைப்பு நிலைய அதிகாரி லோகநாதன் தலைமையில் செங்குன்றம் மற்றும் மாதவரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை உடனடியாக அணைத்தனர்.

தீ விபத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் கருகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். சம்பவ இடத்தை புழல் வருவாய் ஆய்வாளர் உமாமகேஸ்வரி மற்றும் வருவாத்துறையினர் பார்வையிட்டனர்.

Next Story