சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி தொழிலாளர்கள் 2 பேர் பலி இணைபிரியா நண்பர்கள் கார் மோதி பலியான பாலாஜி, சுப்பிரமணி.


சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி தொழிலாளர்கள் 2 பேர் பலி இணைபிரியா நண்பர்கள் கார் மோதி பலியான பாலாஜி, சுப்பிரமணி.
x
தினத்தந்தி 30 Dec 2016 4:15 AM IST (Updated: 30 Dec 2016 2:18 AM IST)
t-max-icont-min-icon

சின்னாளபட்டி, திண்டுக்கல் அருகே சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் இருவரும் இணைபிரியா நண்பர்கள் ஆவார்கள். இந்த விபத்து குறித்து போலீஸ் த

சின்னாளபட்டி,

திண்டுக்கல் அருகே சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் இருவரும் இணைபிரியா நண்பர்கள் ஆவார்கள்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

இணைபிரியா நண்பர்கள்

திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவருடைய மகன் பாலாஜி (வயது 23). அதே பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சுப்பிரமணி (23). இணைபிரியா நண்பர்களான இவர்கள், இருவரும் ஐ.டி.ஐ. படித்துள்ளனர். திண்டுக் கல்-மதுரை 4 வழிச்சாலையில் உள்ள போக்குவரத்து நகர் பகுதியில் ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர் களாக வேலை பார்த்து வந்தனர்.

தினமும் இவர்கள் இருவரும் ஒன்றாக வேலைக்கு செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் இருவரும் இரவு பணிக்கு வேலைக்கு சென்றனர். பின்னர் வேலை முடிந்து நேற்று காலை தொழிற்சாலையை விட்டு வெளியே வந்தனர். பின்னர் பஸ் ஏறுவதற்காக திண்டுக்கல்- மதுரை 4 வழிச்சாலையை கடக்க முயன்றனர்.

கார் மோதியது

அப்போது, திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் ஒன்று பயங்கரமாக அவர்கள் மீது மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். எனினும் கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் நண்பர்கள் 2 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story