இயற்கை வளங்கள் தனியாருக்கு தாரைவார்ப்பு காங்கிரஸ் அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி


இயற்கை வளங்கள் தனியாருக்கு தாரைவார்ப்பு காங்கிரஸ் அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி
x
தினத்தந்தி 30 Dec 2016 4:21 AM IST (Updated: 30 Dec 2016 4:21 AM IST)
t-max-icont-min-icon

இயற்கை வளங்கள் தனியாருக்கு தாரைவார்க்கும் காங்கிரஸ் அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் ஹாவேரியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– ஆர்வம் காட்ட

பெங்களூரு,

இயற்கை வளங்கள் தனியாருக்கு தாரைவார்க்கும் காங்கிரஸ் அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் ஹாவேரியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ஆர்வம் காட்டவில்லை

கர்நாடகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குடிநீர் வசதி, கோசாலைகள் மற்றும் வேலை வாய்ப்பு வசதிகளை இந்த அரசு ஏற்படுத்தி கொடுக்கவில்லை. இந்த அரசு தூக்கத்தில் உள்ளது போல் இருக்கிறது. வேலை வாய்ப்புகள் கிடைக்காததால் மக்கள் தங்களின் சொந்த ஊர்களை விட்டு வெளி மாநிலங்களுக்கு செல்கிறார்கள்.

மந்திரிகள் பெங்களூருவில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்கள். அவர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களின் கஷ்டங்களை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை. வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ள மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு சொல்கிறது.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில்...

ஆனால் எவ்வளவு நிதி தங்களுக்கு கிடைத்துள்ளது என்பது குறித்து மாவட்ட நிர்வாகங்கள் இதுவரை சொல்லவில்லை. கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்தில் கூலி வழங்க வேண்டும் என்று மந்திரி எச்.கே.பட்டீல் சொல்கிறார். ஆனால் பல பகுதிகளில் ஒரு மாதம் ஆனாலும் கூலி வழங்காத நிலை தான் நிலவுகிறது.

இதற்கு யார் பொறுப்பு?. பெலகாவியில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் வறட்சி குறித்து நாங்கள் பல்வேறு தகவல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆனால் இந்த அரசு எதையும் காதில் போட்டு கொள்ளவில்லை. மிக முக்கியமான பசுமை சொத்தான கப்தகுட்ட பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து நீக்கி அதை கனிம சுரங்க தொழில் செய்ய அனுமதி வழங்குவது மிகப்பெரிய குற்றம் ஆகும்.

மக்கள் மன்னிக்க மாட்டார்கள்

இயற்கை வளங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் இந்த அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். நேரம் வரும்போது காங்கிரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.


Next Story