நிரந்தர குடிநீர் வசதி கோரி 201–வது நாளாக தர்ணா போராட்டம் வாட்டாள் நாகராஜ் பங்கேற்பு


நிரந்தர குடிநீர் வசதி கோரி 201–வது நாளாக தர்ணா போராட்டம் வாட்டாள் நாகராஜ் பங்கேற்பு
x
தினத்தந்தி 30 Dec 2016 4:23 AM IST (Updated: 30 Dec 2016 4:23 AM IST)
t-max-icont-min-icon

கோலார் மற்றும் சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களுக்கு நிரந்தர குடிநீர் வசதி ஏற்படுத்தி தரக்கோரி கோலார்–சிக்பள்ளாப்பூர் மாவட்ட நிரந்தர குடிநீர் போராட்ட அமைப்பினர் கோலாரில் கடந்த 200 நாட்களாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 201–வது நாளாக அவ

கோலார் தங்கவயல்

கோலார் மற்றும் சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களுக்கு நிரந்தர குடிநீர் வசதி ஏற்படுத்தி தரக்கோரி கோலார்–சிக்பள்ளாப்பூர் மாவட்ட நிரந்தர குடிநீர் போராட்ட அமைப்பினர் கோலாரில் கடந்த 200 நாட்களாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 201–வது நாளாக அவர்களுடைய போராட்டம் தொடர்ந்து நடந்தது. இந்தநிலையில் நேற்று போராட்டத்தில் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். போராட்டத்தில் அவர் பேசுகையில்,‘‘கோலார்–சிக்பள்ளாப்பூர் மாவட்ட மக்களின் கோரிக்கையான நிரந்தர குடிநீர் திட்டத்தை மாநில அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கன்னட சலுவளி வாட்டாள் கட்சி மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள், கட்சிகள் இணைந்து அடுத்த வருடம்(2017) பிப்ரவரி மாதம் 18–ந் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்’’ என்று கூறினார்.


Next Story