நஞ்சன்கூடுவில் ரூ.100 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் தொடக்கம் முதல்–மந்திரி சித்தராமையா அடிக்கல் நாட்டினார்


நஞ்சன்கூடுவில் ரூ.100 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் தொடக்கம் முதல்–மந்திரி சித்தராமையா அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 30 Dec 2016 4:25 AM IST (Updated: 30 Dec 2016 4:25 AM IST)
t-max-icont-min-icon

நஞ்சன்கூடுவில் ரூ.100 கோடி செலவில் வளர்ச்சி பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது. இந்த விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார். சித்தராமையா அடிக்கல் நாட்டினார் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் பொதுப்ப

மைசூரு,

நஞ்சன்கூடுவில் ரூ.100 கோடி செலவில் வளர்ச்சி பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது. இந்த விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார்.

சித்தராமையா அடிக்கல் நாட்டினார்

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, அறநிலையத்துறை உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி பணிகளுக்கான தொடக்க விழா நேற்று நஞ்சன்கூடுவில் உள்ள ஸ்ரீகண்டேஷ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது.

இந்த விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு ரூ.100 கோடி செலவிலான வளர்ச்சி பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். இந்த விழாவில், மாவட்ட பொறுப்பு மந்திரி மகாதேவப்பா, துருவநாராயண் எம்.பி. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விரைவில் இடைத்தேர்தல்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மந்திரிசபை மாற்றியமைக்கப்பட்டபோது மந்திரியாக இருந்த சீனிவாச பிரசாத் நீக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த சீனிவாச பிரசாத், கட்சியில் இருந்து விலகினார். மேலும் நஞ்சன்கூடு தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், சீனிவாச பிரசாத் பா.ஜனதாவில் இணைய உள்ளதாக அறிவித்தார். நஞ்சன்கூடு தொகுதியில் கூடிய விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் மந்திரி சீனிவாச பிரசாத், பா.ஜனதா சார்பில் போட்டியிடுவார் என்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா அறிவித்துள்ளார். சீனிவாச பிரசாத், காங்கிரசை எதிர்த்து பா.ஜனதா சார்பில் நஞ்சன்கூடு தொகுதியில் போட்டியிடுவதால், காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெறுவது கடினம் என்று கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்று நஞ்சன்கூடு தொகுதியை தக்க வைக்கும் நோக்குடன் காங்கிரஸ் கட்சி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த நோக்கத்தில் தான் நஞ்சன்கூடுவில் ரூ.100 கோடி செலவில் வளர்ச்சி பணிகளை சித்தராமையா தொடங்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.


Next Story