பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டத்தில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டத்தில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Dec 2016 4:33 AM IST (Updated: 30 Dec 2016 4:33 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டத்தில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊர்வலம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜேந்திரன், செயலாளர்

ஜெயங்கொண்டம்,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டத்தில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊர்வலம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ராஜீ, துணை செயலாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் தில்லை நடராஜன் வரவேற்றார்.

ஜெயங்கொண்டம் அண்ணா சிலையில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை மாநில தலைவர் விசுவநாதன் தொடங்கி வைத்தார். இதில் விவசாய சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டு, கையில் கருகிய நெற்பயிர்களை ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று காந்தி பூங்காவை வந்தடைந்தது.

கோரிக்கைகள்

பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், தற்கொலை செய்து கொண்ட 47 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும், ஜெயங்கொண்டம் நகருக்குள் வேளாண்மை அலுவலகத்தை அமைக்க வேண்டும், பொன்னேரியில் மண் எடுக்க விவசாயிகளுக்கு தடை விதிக்கக்கூடாது, விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இந்த ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில், விவசாய சங்க பொறுப்பாளர்கள் கருணாநிதி, சாமிதுரை, கலைச்செவியன், ராஜகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய தலைவர் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.

Next Story