மின்சார ரெயிலில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த காவலாளி கைது வீடியோ வெளியாகி பரபரப்பு


மின்சார ரெயிலில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த காவலாளி கைது வீடியோ வெளியாகி பரபரப்பு
x
தினத்தந்தி 30 Dec 2016 4:46 AM IST (Updated: 30 Dec 2016 4:46 AM IST)
t-max-icont-min-icon

மின்சார ரெயிலில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த காவலாளி கைது செய்யப்பட்டார். அவர் சில்மி‌ஷத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெண்ணிடம் சில்மி‌ஷம் மும்பையில் மின்சார ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனிப்பெட்டிகள

மும்பை

மின்சார ரெயிலில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த காவலாளி கைது செய்யப்பட்டார். அவர் சில்மி‌ஷத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெண்ணிடம் சில்மி‌ஷம்

மும்பையில் மின்சார ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனிப்பெட்டிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஆனால் இந்த பெட்டிகளில் விதிமுறைகளை மீறி மற்றவர்களும் ஏறி பயணிக்கிறார்கள். இந்த நேரங்களில் அவர்களால் மாற்றுத்திறனாளி பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கும் ஆளாகிறார்கள்.

இதை தடுப்பதற்காக ரெயில்வே போலீஸ் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளி பெட்டியில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது அருகில் அமர்ந்திருக்கும் ஆண் ஒருவரால் சில்மி‌ஷத்திற்கு உள்ளாகும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் தொடர்புடைய நபர் நேற்று காட்கோபர் ரெயில் நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

காவலாளி கைது

அந்த நபர் தானே கர்வாளேநகரை சேர்ந்த நிலேஷ் கதம் (வயது41) என்பதும், மும்பையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. தன்னை போலீஸ்காரர் என்று கூறிக் கொண்டு மாற்றுத்திறனாளி பெட்டியில் பயணிப்பதையே அவர் வழக்கமாக கொண்டு இருந்துள்ளார்.

அவர் மீது ரெயில்வே போலீசார் பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story