உப்பிடமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மேய்ச்சல் நிலங்கள் வீட்டுமனையாக மாறிவிட்டதால் மாடுகளை இறைச்சிக்காக விற்கும் அவலம்
உப்பிடமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மேய்ச்சல் நிலங்கள் வீட்டுமனையாக மாறிவிட்டதால் மாடுகளை இறைச்சிக்காக அடிமாட்டு விலைக்கு விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தீவனங்களின் விலையை குறைக்க விவசாயிகள் அரசுக்கு
உப்பிடமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மேய்ச்சல் நிலங்கள் வீட்டுமனையாக மாறிவிட்டதால் மாடுகளை இறைச்சிக்காக அடிமாட்டு விலைக்கு விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தீவனங்களின் விலையை குறைக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாட்டு சந்தை
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இங்குள்ள பலர் வீடுகளில் மாடுகள் வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதிகளில் உள்ள மேய்ச்சல் நிலங்கள் எல்லாம் தற்போது வீட்டுமனையாக மாறி விட்டதால் மாடுகளை மேய்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாட்டுத்தீவனங்கள் விலை அதிகரிப்பு மற்றும் பராமரிப்பு செலவு காரணமாக அப்பகுதி விவசாயிகள் பலர் பால் தரும் மாடுகளை மட்டுமே வைத்துக்கொண்டு மற்ற மாடுகளை விற்று வருகின்றனர்.
உப்பிடமங்கலத்தில் பிரசித்தி பெற்ற மாட்டு சந்தை உள்ளது. இந்த மாட்டு சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை செயல்படும். இந்நிலையில் உப்பிடமங்கலம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் மாடுகளை இங்கு வந்து விற்றுச் செல்கின்றனர். இங்கு விற்கப்படும் மாடுகளை கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வியாபாரிகளும், கேரள மாநிலத்தை சேர்ந்த மாட்டு வியாபாரிகளும் வாங்கிச்செல்கின்றனர். கேரளாவை காட்டிலும் இங்கு மாடுகள் விலை மிகவும் குறைவாக இருப்பதால் வேன், லாரிகளில் வந்து ஆயிரக்கணக்கான அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
கோரிக்கை
நல்ல மாடுகள் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மாடு ரூ.15 ஆயிரத்திற்கும், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மாடு ரூ.10 ஆயிரத்திற்கும் கிடைப்பதால் அடிமாட்டு விலைக்கு வாங்கிச் செல்கின்றனர்.
இவ்வாறு வெளியூருக்கு கொண்டு செல்லப்படும் மாடுகள் அங்கு இறைச்சிக்காக பயன்படுகிறது. இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதால் பால் உற்பத்தியும் குறைந்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மாட்டுத்தீவனங்களின் விலை அதிகமாக இருப்பதால் எங்களால் மாடுகளை பராமரிக்க முடியவில்லை. இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு மாட்டு தீவனங்களின் விலையை குறைத்தால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது பருவமழை பொய்த்து போனதால் எங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை. மாடுகளை வைத்து தான் நாங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம் என்றனர்.

Next Story