தேர்தல் விதிமுறை மீறல் பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே மீது போலீசார் வழக்குப்பதிவு


தேர்தல் விதிமுறை மீறல் பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே மீது போலீசார் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 30 Dec 2016 4:48 AM IST (Updated: 30 Dec 2016 4:48 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து, தேர்தல் விதிமுறையை மீறியதற்காக மாநில பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராவ்சாகேப் தன்வே மராட்டியத்தில் 3–ம் கட்ட உள்ளாட்சி தேர்தலையொட்டி, மாநில பா

மும்பை

உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து, தேர்தல் விதிமுறையை மீறியதற்காக மாநில பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ராவ்சாகேப் தன்வே

மராட்டியத்தில் 3–ம் கட்ட உள்ளாட்சி தேர்தலையொட்டி, மாநில பாரதீய ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே அவுரங்காபாத் மாவட்டம் பைதானில் சமீபத்தில் பிரசாரம் செய்தார். அப்போது, ‘‘தேர்தல் நேரத்தில் லட்சுமி உங்களை தேடிவந்தால், அவரை ஏற்று கொள்ளுங்கள்’’ என்று தெரிவித்தார்.

‘லட்சுமி’ என்று பணத்தை பொருள்படுமாறு அவர் கூறிய இந்த கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், ராவ்சாகேப் தன்வேயின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனவே, அவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின.

வழக்குப்பதிவு

இதனிடையே, ராவ்சாகேப் தன்வேயின் கருத்துக்கு விளக்கம் அளிக்குமாறு மாநில தேர்தல் கமி‌ஷன் அவருக்கு நோட்டீசு அனுப்பியது. அவர் அனுப்பிய பதில், தேர்தல் கமி‌ஷனருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, ராவ்சாகேப் தன்வே மீது தேர்தல் விதிமுறை மீறல் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அவுரங்காபாத் மாவட்ட கலெக்டர் நிதி பாண்டேயிடம் மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

இதன்பேரில், பைதான் துணை மண்டல அதிகாரி கே.நேட்கே அளித்த புகாரின்கீழ், ராவ்சாகேப் தன்வே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அவுரங்காபாத் கிராமப்புற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நவீன்சந்திர ரெட்டி நிருபர்களிடம் உறுதிப்படுத்தினார்.



Next Story