மும்பை மாநகராட்சி தேர்தலை காங்கிரசும் தனித்தே சந்திக்கும் சஞ்சய் நிருபம் பேட்டி
மும்பை மாநகராட்சி தேர்தலை காங்கிரசும் தனித்தே சந்திக்கும் என்று மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் கூறினார். சஞ்சய் நிருபம் போட்டி மும்பை மாநகராட்சி தேர்தலை தனித்து சந்திப்போம் என்று அதிரடியாக அறிவித்த தேசியவாத காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடும் தனது
மும்பை
மும்பை மாநகராட்சி தேர்தலை காங்கிரசும் தனித்தே சந்திக்கும் என்று மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் கூறினார்.
சஞ்சய் நிருபம் போட்டிமும்பை மாநகராட்சி தேர்தலை தனித்து சந்திப்போம் என்று அதிரடியாக அறிவித்த தேசியவாத காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடும் தனது வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியலையும் வெளியிட்டது. காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து மாநகராட்சி தேர்தல் களத்தை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேசியவாத காங்கிரசின் இந்த அறிவிப்பு வெளியான ஒரு மணி நேரத்தில் காங்கிரசும் மும்பை மாநகராட்சி தேர்தலை தனித்தே சந்திக்கும் என்று மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் அறிவித்தார். இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தனித்து சந்திப்போம்காங்கிரஸ் கட்சி மிகுந்த வலிமையுடன் உள்ளது. எனவே நாங்கள் மும்பை மாநகராட்சி தேர்தலை தனியாக நின்றே சந்திப்போம். மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து வருகிற 6–ந் தேதி மும்பையில் பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்.
பிரதமர் மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அப்பாவி மக்களும், ஏழை விவசாயிகளும் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கருப்பு பணத்தை வைத்திருப்பவர்கள் நிம்மதியாகவே இருக்கின்றனர்.
நரேந்திர மோடி பல தனியார் நிறுவனங்களிடம் இருந்து பல ஆயிரம் கோடிகளை லஞ்சமாக வாங்கி உள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.