தாழக்குடி அருகே அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண் பிடிக்காததால் விபரீத முடிவு


தாழக்குடி அருகே அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண் பிடிக்காததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 30 Dec 2016 4:56 AM IST (Updated: 30 Dec 2016 4:56 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி, தாழக்குடி அருகே நிச்சயம் செய்யப்பட்ட பெண் பிடிக்காததால் அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விபரீத சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- நிச்சயித்த பெண் பிடிக்காததால்... தாழக்குடி அருகே சந்தைவிளையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருடைய மகன் மகா

ஆரல்வாய்மொழி,

தாழக்குடி அருகே நிச்சயம் செய்யப்பட்ட பெண் பிடிக்காததால் அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விபரீத சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நிச்சயித்த பெண் பிடிக்காததால்...

தாழக்குடி அருகே சந்தைவிளையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருடைய மகன் மகாதேவன் (வயது 28). அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.
கடந்த நவம்பர் மாதம் 20-ந் தேதி ஒரு பெண்ணை பார்த்து நிச்சயதார்த்தம் செய்தனர். ஆனால் மகாதேவனுக்கு அந்த பெண் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு பணியை முடித்து விட்டு மகாதேவன் வீட்டுக்கு வந்தார். பிறகு வீட்டு மாடிக்கு சென்றார்.

தற்கொலை

அங்கு திடீரென அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தற்கொலை செய்ததை அறிந்த பெற்றோர், அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிச்சயம் செய்யப்பட்ட பெண் பிடிக்காததால் அரசு பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story