முற்றுகை போராட்டம் எதிரொலி: மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு

நாகர்கோவில்,
முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக வந்த தகவலை தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கூடுதல் பாதுகாப்பு
மத்திய அரசு ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என அறிவித்ததில் இருந்து நாட்டில் பணப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளதாகவும், 50 நாட்களுக்கு மேல் ஆகியும் இந்த பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படாததை கண்டித்தும் நாகர்கோவிலில் உள்ள மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனின் வீட்டை சில அமைப்புகள் சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவல் போலீசாருக்கு கிடைத்ததை தொடர்ந்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உத்தரவின்பேரில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியின் பின்புற சாலையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
திடீர் பரபரப்பு
அதன்படி நாகர்கோவில் கோட்டார் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், நேசமணிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன், வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ், நேசமணிநகர் சப்-இன்ஸ்பெக்டர் குமாரி சித்ரா மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.
மேலும் இருசக்கர வாகன ரோந்து போலீசாரும் ரோந்து சுற்றி வந்தபடி இருந்தனர். போலீசாரின் இந்த பாதுகாப்பு பணி மாலை வரை தொடர்ந்தது. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வீட்டில் திடீரென போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் நேற்று மாலை வரை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வீட்டை முற்றுகையிட யாரும் வரவில்லை.
அதேநேரத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை செல்வதற்காக நேற்று காலை 6.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து காரில் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story