களக்காடு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக் குடங்களுடன் போராட்டம்
களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ,நகர், மேலக் காலனி, கீழ காலனி, பறையன்குளம் ஆகிய 4 கிராமங்களில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது.
களக்காடு,
களக்காடு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் நேற்று காலிக் குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.
குடிநீர் தட்டுப்பாடு
களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ,நகர், மேலக் காலனி, கீழ காலனி, பறையன்குளம் ஆகிய 4 கிராமங்களில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக இப்பகுதி மக்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் போர்க்கால அடிப்படையில் உடனே குடிநீர் கேட்டு நேற்று காலி குடங்களுடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக அவர்கள் ஜெ.ஜெ.நகரில் இருந்து புறப்பட்டு சாலை மறியல் நடத்துவதற்காக நாங்குநேரி சாலையை நோக்கி புறப்பட்டு வந்தனர். அதன் பின்னர் நாங்குநேரி சாலையின் அருகே அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்ததும் களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், களக்காடு யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சுந்தரராஜ், சுப்பிரமணியன் ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வசந்தகுமார் எம்.எல்.ஏ நிதி மூலம் 4 கிராமங்களிலும் 4 ஆழ்துளை கிணறுகள் புதியதாக அமைக்கப்படும். அதன் மூலம் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் 3 மணி நேரமாக நடத்திய போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஏற்கனவே இந்த கிராமங்களுக்கு படலையார்குளத்தில் இருந்து ஆற்று நீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஆழ்துளை கிணறுகள் மூலமும் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இதற்கிடையே 6 மாதமாக ஆற்று நீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் படலையார்குளம் பஞ்சாயத்து நிர்வாகம் தங்களை புறக்கணிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story