ஆரணி காட்டுப்பகுதியில் கொக்கு, கீரிபிள்ளைகளை சுட்டு கொன்ற 2 நரிக்குறவர்கள் கைது நாட்டு துப்பாக்கி பறிமுதல்


ஆரணி காட்டுப்பகுதியில் கொக்கு, கீரிபிள்ளைகளை சுட்டு கொன்ற 2 நரிக்குறவர்கள் கைது நாட்டு துப்பாக்கி பறிமுதல்
x
தினத்தந்தி 31 Dec 2016 4:15 AM IST (Updated: 30 Dec 2016 6:23 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி காட்டுப்பகுதியில் கொக்கு, கீரிபிள்ளைகளை சுட்டு கொன்ற 2 நரிக்குறவர்களை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. வனத்துறையினர் ரோந்து ஆரணி சரக வெட்டியதொழுவம் வன காட்டுப்பகுதியில் பறவைகள் வேட்டையா

ஆரணி,

ஆரணி காட்டுப்பகுதியில் கொக்கு, கீரிபிள்ளைகளை சுட்டு கொன்ற 2 நரிக்குறவர்களை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

வனத்துறையினர் ரோந்து

ஆரணி சரக வெட்டியதொழுவம் வன காட்டுப்பகுதியில் பறவைகள் வேட்டையாடுவதாக திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் சண்ணப்பனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், ஆரணி வனசரகர் சக்திகணேசன், வனவர் மணி, வனகாப்பாளர்கள் ஷாப்பு, கண்ணப்பன், பீமன், வன காவலர் சின்னப்பன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வெட்டியதொழுவம் வன காட்டுப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது 2 பேர் நாட்டு துப்பாக்கியுடன் காட்டுப்பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் பிடித்து, அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். பைகளில் 13 கொக்குகள், 2 கீரிபிள்ளைகள் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.

பின்னர் வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஆரணி பையூரை சேர்ந்த நரிக்குறவர்கள் மாவீரன் (வயது 37), சீரஞ்சிவி (27) என்பதும், கொக்கு மற்றும் கீரிபிள்ளைகளை சுட்டு கொன்றதும் தெரியவந்தது.

நரிக்குறவர்கள் 2 பேர் கைது

அதைத் தொடர்ந்து வனத்துறையினர் அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கியும், சுட்டு கொன்ற கொக்கு, கீரிபிள்ளைகளையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து ஆரணி வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூரில் ஜெயிலில் அடைத்தனர்.


Next Story