தூத்துக்குடி மாநகராட்சியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரம்

தூத்துக்குடி மாநகராட்சியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 31 Dec 2016 2:15 AM IST (Updated: 30 Dec 2016 6:33 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சியில் ஐகோர்ட்டு கிளை உத்தரவின் பேரில், நேற்று சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கியது. மாநகராட்சி முழுவதும் உள்ள அனைத்து சீமைக்கருவேல மரங்களும் அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தூத்துக்குடி,

கருவேலமரம்

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களின் தலைநகரங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. அதன்பேரில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள கருவேல மரங்களை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அகற்றும் பணி

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி 3–வது மைல் மேம்பாலம் அருகே மண்டிக் கிடந்த சீமை கருவேல மரங்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. முத்தையாபுரம் பகுதியிலும் ஆங்காங்கே வளர்ந்து இருந்த சீமைக் கருவேல மரங்களும் அகற்றப்பட்டன.

ஸ்பிக் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் உள்ள கருவேல மரங்கள், அந்த நிறுவனம் சார்பில் அகற்றப்பட்டது. அந்த நிறுவனம் சார்பில் தெற்கு மண்டலத்தில் கருவேல மரங்களை அகற்றும் பணியும் நடந்து வருகிறது.

தொடர்ந்து மாநகராட்சி முழுவதும் சீமை கருவேல மரங்கள் உள்ள பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டு, அனைத்தும் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றப்படும் என, மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story