மோட்டார் சைக்கிளில் வந்து கிராம நிர்வாக பெண் அதிகாரியிடம் 10 பவுன் நகை பறிப்பு
காரியாபட்டி அருகிலுள்ள வி.நாங்கூர் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் பபிதா. தூத்துக்குடியை சேர்ந்த இவர் காரியாபட்டியில் வசித்து வருகிறார். நேற்று காலை இவர் அலுவலகத்துக்கு தலையாரி சுந்தரமகாலிங்கத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாப்பனம் க
காரியாபட்டி,
காரியாபட்டி அருகிலுள்ள வி.நாங்கூர் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் பபிதா. தூத்துக்குடியை சேர்ந்த இவர் காரியாபட்டியில் வசித்து வருகிறார். நேற்று காலை இவர் அலுவலகத்துக்கு தலையாரி சுந்தரமகாலிங்கத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாப்பனம் கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் திடீரென பபிதாவின் அருகே வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துச் சென்று விட்டனர். பபிதாவின் புகாரை தொடர்ந்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story