தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வல்லுநர் குழு ஆய்வு


தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வல்லுநர் குழு ஆய்வு
x
தினத்தந்தி 31 Dec 2016 1:00 AM IST (Updated: 30 Dec 2016 6:59 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டு உள்ளது. குடிநீர் திட்டங்கள் தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீராதாரமாக தாமிரபரணி ஆறு வ

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டு உள்ளது.

குடிநீர் திட்டங்கள்

தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீராதாரமாக தாமிரபரணி ஆறு விளங்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கு நீர் கொண்டு செல்லும் வகையில் 20 எம்.ஜி.டி. திட்டம், 120 பஞ்சாயத்துகளுக்கான 3 எம்.ஜி.டி. குடிநீர் திட்டம், துறைமுகத்துக்கான ஒரு எம்.ஜி.டி. திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. 14 கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர மாநகராட்சி பகுதியில் 3 குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வறண்ட ஆறு

தற்போது வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தாமிரபரணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கடலில் கலக்கும் இடம் வரை தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. இதனை நம்பி உள்ள குடிநீர் திட்ட பகுதிகளும் மெல்ல மெல்ல வறண்டு வருகின்றன. போதுமான அளவுக்கு குடிநீரை பம்பிங் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால் விரைவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

வல்லுநர் குழு ஆய்வு

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தலைமையிலான அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி மாவட்டத்தில் நிலத்தடி நீர் எந்த பகுதியில் அதிகமாக உள்ளது, அங்கு இருந்து தண்ணீரை பெறுவதற்கு போதுமான ஆழ்துளை கிணறுகள் உள்ளதா? புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டுமா? என்பது குறித்து நிலத்தடி நீர் ஆய்வாளர்கள் அடங்கிய வல்லுநர் குழுவினர் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின் அடிப்படையில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ரவிகுமார் நேற்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


Next Story