நெல்லையில் கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு நேரடியாக சம்பளம் வழங்கப்பட்டது
மத்திய அரசு 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. வங்கிகள், ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க முடியாதநிலை ஏற்பட்டு உள்ளது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வங்கிகளின் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
நெல்லை,
மத்திய அரசு 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. வங்கிகள், ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க முடியாதநிலை ஏற்பட்டு உள்ளது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வங்கிகளின் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஏ.டி.எம்.மையங்களில் அதிகபட்சமாக ரூ.2 ஆயிரத்து 500 வரை மட்டுமே ஒரு நாளைக்கு எடுக்க முடிகிறது. இதற்கு ஏ.டி.எம்.மையங்களில் வரிசையில் அதிக நேரம் நிற்கவேண்டிய நிலை உள்ளது. வங்கிகளில் ரூ.24 ஆயிரம் மட்டும் சிலிப் எழுதி கொடுத்து எடுக்க முடிகிறது.
அரசு ஊழியர்கள் கடந்த நவம்பர் மாத சம்பளத்தை எடுக்கமுடியாமல் அவதிப்பட்டனர். அரசு ஊழியர்களின் சிரமத்தை போக்க அவர்களுடைய இந்த மாத சம்பளத்தை நேரடியாக வழங்க நெல்லை ஸ்டேட் வங்கி முடிவு செய்தது. இந்த நிலையில் நேற்று ஸ்டேட் வங்கி ஊழியர்கள் நேற்று பணத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு ஊழியர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தின் அடிப்படையில் தலா ரூ.24 ஆயிரம் மட்டும் நேரடியாக வழங்கினார்கள்.

Next Story