நெய்வேலி அருகே மின்கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; முன்னாள் ராணுவ வீரர் சாவு


நெய்வேலி அருகே மின்கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; முன்னாள் ராணுவ வீரர் சாவு
x
தினத்தந்தி 31 Dec 2016 4:15 AM IST (Updated: 30 Dec 2016 8:25 PM IST)
t-max-icont-min-icon

நெய்வேலி அருகே மின்கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார். முன்னாள் ராணுவ வீரர் நெய்வேலி அருகே உள்ள மாருதிநகரில் வசித்து வருபவர் முருகேசன் (வயது46), முன்னாள் ராணுவ வீரர். தற்போது இவர் வட்டம் 2–ல் உள்ள

நெய்வேலி,

நெய்வேலி அருகே மின்கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.

முன்னாள் ராணுவ வீரர்

நெய்வேலி அருகே உள்ள மாருதிநகரில் வசித்து வருபவர் முருகேசன் (வயது46), முன்னாள் ராணுவ வீரர். தற்போது இவர் வட்டம் 2–ல் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் காவலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு இவர் என்.எல்.சி. மத்திய தொழில்நுட்ப அலுவலகம் எதிரே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது முன்னால் சென்ற சைக்கிளின் மீது மோதாமல் இருப்பதற்காக முருகேசன் தனது மோட்டார் சைக்கிளை திருப்பினார். இதில் அவரது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

சாவு

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த முருகேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story