தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் இளைஞர்களுக்கு நவீன தொழிற்பயிற்சி வகுப்புகள்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் இளைஞர்களுக்கு நவீன தொழிற்பயிற்சி வகுப்புகள்
x
தினத்தந்தி 31 Dec 2016 2:00 AM IST (Updated: 30 Dec 2016 9:07 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில், இளைஞர்களுக்கான நவீன தொழிற்பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில், இளைஞர்களுக்கான நவீன தொழிற்பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன.

தொழிற்பயிற்சி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் தாமிர முத்துக்கள் திட்டத்தின் கீழ், தூத்துக்குடியில் உள்ள இளைஞர்களுக்கு இலவசமாக தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு வகுப்புகள் கடந்த 2014–ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு எலக்ட்ரீசியன் பயிற்சி, டேட்டா என்ட்ரி பயிற்சி, தையல் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தன.

தொடக்க விழா


இந்த நிலையில் தற்போது வழங்கப்படும் பயிற்சிகளுடன் நவீன தொழிற்பயிற்சிகளான வெல்டிங், சோலார் டெக்னீசியன் உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பிற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த விழாவில், ஸ்டெர்லைட் நிறுவன துணை தலைவர் தனவேல் வரவேற்றார். தலைமை செயல் அதிகாரி ராம்நாத் தலைமை தாங்கினார். தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின்நிலைய தலைமை செயல் அதிகாரி நீலகண்டபிள்ளை, வ.உ.சி. கல்வி அறக்கட்டளை தலைவர் சொக்கலிங்கம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி பயிற்சியை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் நிறுவன மருத்துவ அதிகாரி கைலாசம், தொழிற்பயிற்சி திட்ட மேலாளர் ராஜன், மேலாளர் சுகந்தி செல்லதுரை மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story