பட்டுக்கோட்டை அருகே தீயில் எரிந்து கூரை வீடு நாசம் ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்


பட்டுக்கோட்டை அருகே தீயில் எரிந்து கூரை வீடு நாசம் ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 31 Dec 2016 4:15 AM IST (Updated: 30 Dec 2016 9:55 PM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை அருகே தீயில் எரிந்து கூரை வீடு நாசமடைந்தது. இதில் ரூ.2 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன. தீப்பிடித்தது பட்டுக்கோட்டை அருகே உள்ள வளவன்புரத்தை சேர்ந்தவர் ஆனந்தன்(வயது38). விவசாயி. இவர் கூரை வீட்டில் வசித்து வந்தார். சம்பவ த்தன்று இரவு 7.30 மணி

பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டை அருகே தீயில் எரிந்து கூரை வீடு நாசமடைந்தது. இதில் ரூ.2 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.

தீப்பிடித்தது

பட்டுக்கோட்டை அருகே உள்ள வளவன்புரத்தை சேர்ந்தவர் ஆனந்தன்(வயது38). விவசாயி. இவர் கூரை வீட்டில் வசித்து வந்தார். சம்பவ த்தன்று இரவு 7.30 மணி அளவில் ஆனந்தனும் அவரது மனைவியும் கதவை பூட்டி விட்டு வெளியில் சென்று இருந்தனர். அப்போது அவருடைய கூரை வீடு திடீரென் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் கூரை வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

விசாரணை

இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ.25 ஆயிரம், டி.வி, மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், பீரோ, கட்டில் மற்றும் பாத்திரங்கள், ஆதார் கார்டு, ரே‌ஷன் கார்டு மற்றும் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து ஆனந்தன் பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story