திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் காதல் கணவருடன் போலீசில் தஞ்சம்


திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் காதல் கணவருடன் போலீசில் தஞ்சம்
x
தினத்தந்தி 31 Dec 2016 3:45 AM IST (Updated: 30 Dec 2016 10:15 PM IST)
t-max-icont-min-icon

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் காதல் கணவருடன் போலீசில் தஞ்சம் அடைந்தார். காதல் ஜோடி போலீசில் தஞ்சம் வேதாரண்யம் அருகே தென்னம்புலம் கிராமம், கலைநகர் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மகள் சுகன்யா (வயது 20) பிளஸ்–1 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தா

வேதாரண்யம்,

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் காதல் கணவருடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

வேதாரண்யம் அருகே தென்னம்புலம் கிராமம், கலைநகர் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மகள் சுகன்யா (வயது 20) பிளஸ்–1 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருக்கும் வேதாரண்யம் பகுதியில் உள்ள ஒரு வாலிபருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்தநிலையில் 15.12.2016 அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்ட சுகன்யா வீட்டைவிட்டு மாயமாகி விட்டார். தந்தை சின்னதுரை கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருணாசலம், சப்–இன்ஸ்பெக்டர் பசுபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான சுகன்யாவை தேடிவந்தனர். இந்தநிலையில் சுகன்யா தன்னுடைய காதலன் தமிழ்ச்செல்வன் (23) என்பவருடன் கரியாப்பட்டினம் போலீசில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

விசாரணையில் தமிழ்ச்செல்வன் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும், சுகன்யா– தமிழ்ச்செல்வன் இருவரும் வடசென்னையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தெரியவந்தது. கரியாப்பட்டினம் போலீசார் இருவரையும் வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


Next Story