வாலிபர் பாலியல் தொந்தரவு செய்ததால் பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை


வாலிபர் பாலியல் தொந்தரவு செய்ததால் பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 31 Dec 2016 4:15 AM IST (Updated: 30 Dec 2016 10:33 PM IST)
t-max-icont-min-icon

வாலிபர் பாலியல் தொந்தரவு செய்ததால் பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பாலியல் தொந்தரவு சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் சசி (வயது 23). இவர் 28 வயதுடைய பெண் ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெ

சங்கராபுரம்,

வாலிபர் பாலியல் தொந்தரவு செய்ததால் பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பாலியல் தொந்தரவு

சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் சசி (வயது 23). இவர் 28 வயதுடைய பெண் ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அந்த பெண் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த பெண் பரிதாபமாக இறந்தார். இதையறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு வழக்குப்பதிந்து சசியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story