கடனை செலுத்திய பிறகும் பத்திரத்தை வழங்காததால் கூட்டுறவு சங்கத்துக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் அபராதம் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு


கடனை செலுத்திய பிறகும் பத்திரத்தை வழங்காததால் கூட்டுறவு சங்கத்துக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் அபராதம் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 31 Dec 2016 4:15 AM IST (Updated: 30 Dec 2016 10:44 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர், கடனை செலுத்திய பிறகும் பத்திரத்தை வழங்காததால் கூட்டுறவு சங்கத்துக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு உத்தரவி ட்டுள்ளது. கடன் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நெம்மேலி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இ

திருவாரூர்,

கடனை செலுத்திய பிறகும் பத்திரத்தை வழங்காததால் கூட்டுறவு சங்கத்துக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு உத்தரவி ட்டுள்ளது.

கடன்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நெம்மேலி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனது வீட்டை புதுப்பிக்க கடந்த 1999-2000-ம் ஆண்டுகளில் 3 தவணையாக ரூ.42 ஆயிரத்தை நன்னிலத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் கடனாக பெற்றார். இந்த கடன் தொகையை வட்டியுடன் 2006-ம் ஆண்டு திரும்பி செலுத்தினார். இதைத்தொடர்ந்து தனது கடனுக்கு அடமானமாக வைக்கப்பட்டிருந்த வீட்டு பத்திரத்தை பல முறை சீனிவாசன் கேட்டார். ஆனால் கூட்டுறவு சங்கம் பத்திரத்தை வழங்கவில்லை.

ரூ.1 லட்சத்து 5 ஆயிரம்

இதனால் விரக்தி அடைந்த சீனிவாசன், திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நுகர்வோர் மன்ற தலைவர் ஜெயச்சந்திரன், உறுப்பினர்கள் ரமேஷ், சிவசங்கரி ஆகியோர் விசாரித்தனர். விசாரணை முடிவில் சீனிவாசன், கடன் தொகையை திரும்பி செலுத்தியுள்ளதால் அவர் அடமானமாக வைத்த வீட்டு பத்திரத்தை கூட்டுறவு சங்கம் திரும்பி வழங்கியிருக்க வேண்டும். ஆனால் வீட்டு பத்திரத்தை திரும்ப வழங்காததால் சீனிவாசனுக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் சேவை குறைபாட்டுக்காக அவருக்கு ரூ.1 லட்சமும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும் சேர்த்து மொத்தம் ரூ.1லட்சத்து 5 ஆயிரம் நன்னிலம் கூட்டுறவு சங்கம் அபராதமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Next Story