மதுவிற்பனை செய்த 5 பேர் கைது


மதுவிற்பனை செய்த 5 பேர் கைது
x
தினத்தந்தி 31 Dec 2016 3:45 AM IST (Updated: 30 Dec 2016 10:50 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் மதுவிற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். சோதனை ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பதற்கு முன்னரும், பின்னரும் மதுவிற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் மதுவிற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோதனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பதற்கு முன்னரும், பின்னரும் மதுவிற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை தலைமையிலான போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு இடங்களில் மதுவிற்பனையில் ஈடுபட்டவர்களை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

இவ்வாறு ராமநாதபுரம் மதுவிலக்கு போலீசார் மேற்கொண்ட சோதனையில் ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் சத்திரம் முதல் மோர்ப்பண்ணை செல்லும் வழியில் மதுவிற்பனை செய்த மோர்ப்பண்ணை அழகுமலை மகன் கோவிந்தசாமி(வயது 53), ராமநாதபுரம் சாலைத்தெரு பகுதியில் மதுவிற்பனை செய்த தேவிபட்டினம் பெரிசம்பை பகுதியை சேர்ந்த நாகசாமி மகன் இளையராஜா(54) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கமுதி மதுவிலக்கு போலீசார் மேற்கொண்ட சோதனையில் பேரையூர் முதல் இலந்தைகுளம் செல்லும் வழியில் மதுவிற்பனை செய்த பேரையூர் வேலு மகன் பாலமுருகன்(45), கள்ளிக்குளம் விலக்கு ரோடு பகுதியில் மதுவிற்பனை செய்த பேரையூர் ரெத்தினம் மகன் துரைசாமி ஆகிய 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

பறிமுதல்

இதேபோல, ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் மேற்கொண்ட சோதனையில் புதிய பஸ்நிலையம் அம்மா உணவகம் பின்புறம் மதுவிற்பனை செய்த நாகநாதபுரம் தமிழ்செல்வன் மகன் கார்த்திக்குமார்(24) என்பவரை போலீசார் கைதுசெய்தனர். இவ்வாறு மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் மதுவிற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 61 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story