சங்ககிரியில் ஆசிரியையிடம் தாலிச்சங்கிலி பறிக்க முயன்றவன் கைது பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்
சங்ககிரியில் ஆசிரியையிடம் தாலிச்சங்கிலி பறிக்க முயன்றவனை பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவன் கைது செய்யப்பட்டான். தாலிச்சங்கிலி பறிக்க முயற்சி சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சத்யா(வயது45). இவர்
சங்ககிரி,
சங்ககிரியில் ஆசிரியையிடம் தாலிச்சங்கிலி பறிக்க முயன்றவனை பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவன் கைது செய்யப்பட்டான்.
தாலிச்சங்கிலி பறிக்க முயற்சிசேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சத்யா(வயது45). இவர் சங்ககிரியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவரது தாயார் பியூலாவின் வீடு சங்ககிரி நாயக்கர் தோட்டம் பகுதியில் உள்ளது. நேற்று மாலை பள்ளி முடிந்து சத்யா தனது தாயார் பியூலா வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கு இருந்த தனது மகன் ஜோயலை(10) அழைத்துக் கொண்டு சேலம் செல்வதற்காக சங்ககிரி தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று இரவு 7¾ மணிக்கு ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒருவன் சத்யா கழுத்தில் அணிந்து இருந்த 7½ பவுன் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றான். உடனே சத்யா தாலிச்சங்கிலியை கெட்டியாக பிடித்துக் கொண்டு திருடன்....திருடன் என கூச்சல் போட்டார். இதையடுத்து அந்த திருடன் நகையை விட்டு விட்டு தப்பிப்பதற்காக சங்ககிரி பழைய பஸ்நிலையம் நோக்கி ஓடினான்.
கைதுஇதை அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் அறிந்து திருடனை விரட்டிச் சென்று பிடித்தனர். பின்னர் அவனை பொதுமக்கள் சங்ககிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவனிடம் விசாரணை நடத்தினர். இதில் அவன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மா.குமாரபாளையம் பகுதியை சேர்ந்த அருள்கணேசன்(வயது32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்கணேசனை கைது செய்தனர். இந்த சம்பவம் சங்ககிரியில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.