ராம்ராஜ் நிறுவனத்தின் சார்பில் நாளை முதல் ‘வேட்டி வாரம்’ கொண்டாட்டம் ஒரு வேட்டி ரூ.100-க்கு விற்பனை


ராம்ராஜ் நிறுவனத்தின் சார்பில் நாளை முதல் ‘வேட்டி வாரம்’ கொண்டாட்டம் ஒரு வேட்டி ரூ.100-க்கு விற்பனை
x
தினத்தந்தி 31 Dec 2016 4:00 AM IST (Updated: 31 Dec 2016 3:21 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர், ராம்ராஜ் நிறுவனத்தின் சார்பில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 7-ந் தேதி வரை ‘வேட்டி வாரம்’ கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒரு வேட்டி ரூ.100-க்கு விற்பனை

திருப்பூர்,

ராம்ராஜ் நிறுவனத்தின் சார்பில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 7-ந் தேதி வரை ‘வேட்டி வாரம்’ கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒரு வேட்டி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

‘ராம்ராஜ் வேட்டி வாரம்’

திருப்பூர் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சார்பில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 7-ந் தேதி வரை ஒரு வாரத்துக்கு ‘ராம்ராஜ் வேட்டி வாரம்’ கொண்டாடப்படுகிறது. இந்த ஒரு வாரத்துக்கு தமிழகத்தில் உள்ள ராம்ராஜ் ஷோரூம்கள், டீலர்களின் கடைகளில் ரூ.100-க்கு 4 முழம் வேட்டி விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் நேற்று திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மானம் காப்பது நெசவு தொழில் என்பதை உணர்ந்து நெசவாளர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை ஒரு வாரத்துக்கு ‘ராம்ராஜ் வேட்டி வாரம்’ கொண்டாடப்படுகிறது. வேட்டி அணிவது நமது பண்பாட்டின் அடையாளம் மற்றும் கலாசார சின்னம் என்பதை இளைய தலைமுறைக்கு உணர்த்தி, வேட்டி அணிவதன் அவசியத்தை இளைஞர்கள் மனதில் கொண்டு சேர்ப்பதற்காக இந்த வேட்டி வாரம் கொண்டாடப்படுகிறது.

ரூ.100-க்கு வேட்டி விற்பனை

ரூ.185 மதிப்புள்ள 4 முழ வேட்டியை ரூ.100-க்கு விற்பனை செய்கிறோம். தரமான வேட்டிகள் குறைந்த விலையில் இந்த வாரம் முழுவதும் மக்களுக்கு கிடைக்கும். இதற்காக தமிழகத்தில் உள்ள எங்களுடைய 60 ஷோரூம்கள், 3 ஆயிரம் டீலர்களின் கடைகளில் நாளை(ஞாயிற்றுக் கிழமை) முதல் ரூ.100-க்கு வேட்டி கிடைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். இந்த ஒரு வாரத்தில் 6 லட்சம் வேட்டிகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
லாப நோக்கத்துக்காக இந்த வேட்டி வாரம் கொண்டாடப்படவில்லை.

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக இந்த பணியை மேற்கொண்டுள்ளோம். ஐ.டி. துறை உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் இந்த வேட்டியை வாங்குவதற்கு ஆர்வம் தெரிவித்து இருக்கிறார்கள். வேட்டி வாரத்தையொட்டி ரூ.100-க்கு வேட்டிகள் வாங்கி நமது கலாசாரம் வளர அனைவரும் துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு கே.ஆர்.நாகராஜன் கூறினார்.

Next Story