பெரம்பலூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத 6 சிறுவர் காப்பகங்களுக்கு சீல் வைப்பு


பெரம்பலூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத 6 சிறுவர் காப்பகங்களுக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 31 Dec 2016 4:21 AM IST (Updated: 31 Dec 2016 4:21 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் செட்டிக்குளம், பாடாலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 7 இடங்களில் சிறுவர் காப்பகங்கள் உள்ளன. இந்த காப்பகங்களில், பெற்றோரை இழந்த, தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி குழந்

பெரம்பலூர் மாவட்டத்தில் செட்டிக்குளம், பாடாலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 7 இடங்களில் சிறுவர் காப்பகங்கள் உள்ளன. இந்த காப்பகங்களில், பெற்றோரை இழந்த, தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி குழந்தைகள் நலத்துறை பாதுகாப்பு அதிகாரிகள், இந்த காப்பகங்களில் திடீர் ஆய்வு நடத்தினர். இதில் 6 காப்பகங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லாமல் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 6 சிறுவர் காப்பகங்களுக்கும் சீல் வைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அந்த காப்பகங்களில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியில்லாமல் இருந்ததால் குழந்தைகள் அவதி அடைந்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த காப்பகங்களுக்கு சீல் வைத்துள்ளோம் என்றனர்.

Next Story