விவசாயிகளின் வாரிசுகள் வேளாண்மை கல்லூரியில் படிப்பதற்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்
புதுக்கோட்டை, விவசாயிகளின் வாரிசுகள் வேளாண்மை கல்லூரியில் படிப்பதற்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தி
புதுக்கோட்டை,
விவசாயிகளின் வாரிசுகள் வேளாண்மை கல்லூரியில் படிப்பதற்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலி யுறுத்தினர்.
விவசாய கடன் வழங்க வேண்டும்
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பேசினார். வேளாண்மை துறை இணை இயக்குனர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் நரிக்குறவர்கள் இனத்தை சேர்ந்த திருச்சி மாவட்டம் அசூர் பகுதியை சேர்ந்த சீதா என்பவர் கலெக்டர் கணேஷிடம் ஒரு மனு கொடுத்தார்.
அந்த மனுவில், நரிக்குறவர்களின் ஊசிபாசி தொழில் மிகவும் நலிவடைந்து விட்டது. இதனால் நாங்களும் கவுரமாக வாழ விவசாய நிலம் ஒதுக்க வேண்டும். மேலும் கீரனுார் பகுதியில் நான் ஒரு ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறேன். இதற்கு இலவச மின்சாரம் மற்றும் விவசாய கடன் வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
குரங்குகளை பிடிக்க நடவடிக்கை
கூட்டத்தில் விவசாயி திருநாவுக்கரசு பேசும் போது, விசாயிகள் தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். இதனால் கிணறுகளை ஆழப்படுத்த மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குரங்குகள் தொல்லை அதிகமாக இருப்பதால் வனத்துறை சார்பில் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் வாரிசுகள் வேளாண்மை கல்லூரியில் படிப்பதற்கு தனி இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
விவசாயி செல்லத்துரை பேசுகையில், அறந்தாங்கி அருகே உள்ள ராஜேந்திரபுரத்தில் ரூ.3 கோடி செலவில் தேங்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரிக்கும் வகையில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இங்கு எடை பார்க்கும் எந்திரம் வைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
துணை மின்நிலையம் அமைக்க வேண்டும்
தொடர்ந்து விவசாயி சண்முகம் பேசும் போது அனைத்து பகுதியிலும் வாழை பயிரிட்டு உள்ள விவசாயிகள் காப்பீடு செய்ய தோட்டக்கலை துறை வழிவகை செய்யவேண்டும். கொத்தமங்கலம் பகுதியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் மோட்டார்கள் தொடர்ந்து இயக்க முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்றார்.
விவசாயி சேகர் பேசுகை யில், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு புதிய கடன்கள் வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பண பரிவர்த்தனை செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
விவசாயி பொன்னுசாமி பேசும் போது , நத்தமாடிபட்டியில் தொழிற் பூங்கா அமைக்க விவசாயிகள் வாழ்வாதரமாக இருக்கும் நிலங்களை கையகப்படுத்த அரசு முயற்சி செய்கிறது. இதனை கட்டாயமாக கைவிட வேண்டும் என்றார்.
விவசாயி தனபதி கூறும்போது , புதுக்கோட்டை மாவட்டத்தில் பல வருடங்களாக பருவ மழை பொய்த்து விட்டதால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விசாயிகள் மிகுந்த வேதனை அடைந்து உள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரண தொகையை வழங்க வேண்டும். சிறுதானிய விதைகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இவ்வாறாக கூட்டம் நடைபெற்றது.

Next Story