சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது அமலாக்க பிரிவினர் வழக்குப்பதிவு


சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது அமலாக்க பிரிவினர் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 31 Dec 2016 4:54 AM IST (Updated: 31 Dec 2016 4:53 AM IST)
t-max-icont-min-icon

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது அமலாக்க பிரிவினர் கிரிமினல் வழக்குப்பதிவு செய்தனர். ஜாகிர் நாயக் மும்பையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக், தனது சர்ச்சைக்குரிய வெறுப்பு பேச்சுகள் மூலம் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக குற்றச்ச

மும்பை

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது அமலாக்க பிரிவினர் கிரிமினல் வழக்குப்பதிவு செய்தனர்.

ஜாகிர் நாயக்

மும்பையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக், தனது சர்ச்சைக்குரிய வெறுப்பு பேச்சுகள் மூலம் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, அவர் நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தை சட்ட விரோத அமைப்பு என மத்திய அரசு அறிவித்தது. மேலும் இந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது.

அத்துடன், ஜாகிர் நாயக் மீது தேசிய புலனாய்வு துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் சவுதி அரேபியா சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஜாகிர் நாயக் நாடு திரும்பாமல் அங்கேயே தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அமலாக்க பிரிவு

பரபரப்பான இந்த தருணத்தில், 51 வயது ஜாகிர் நாயக் மீதும், அவரது ஐ.ஆர்.எப். (இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டே‌ஷன்) மீதும் பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்க பிரிவினர் புதியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தவிர ஜாகிர் நாயக் மற்றும் அவரது ஐ.ஆர்.எப். நிறுவனம் தொடர்பான வங்கி பரிவர்த்தனை ஆவணங்களை அமலாக்க பிரிவினர் ஏற்கனவே ஆய்வு செய்ததாகவும், இது தொடர்பாக விளக்கம் கோரி சம்மன் அனுப்பப்படும் என்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story