கரூரில் வங்கிகளில் பணம் எடுக்க நீண்ட வரிசையில் காத்து கிடந்த பொதுமக்கள்


கரூரில் வங்கிகளில் பணம் எடுக்க நீண்ட வரிசையில் காத்து கிடந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 31 Dec 2016 5:03 AM IST (Updated: 31 Dec 2016 5:02 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் உள்ள வங்கிகளில் பணம் எடுக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து கிடந்தனர். காத்து கிடக்கும் பொதுமக்கள் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கையாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேலும் வங்கிகளில் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றவும், பணம் எடுக்கவும் பல்வேறு நிபந்த

கரூரில் உள்ள வங்கிகளில் பணம் எடுக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து கிடந்தனர்.

காத்து கிடக்கும் பொதுமக்கள்

கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கையாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேலும் வங்கிகளில் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றவும், பணம் எடுக்கவும் பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் செல்லாத ரூபாய் நோட்டுகளை கையில் வைத்துக்கொண்டு எந்த பொருட்களும் வாங்க முடியாமல் திண்டாடினர். மேலும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மைங்களில் பொதுமக்கள் காலை முதல் இரவு வரை வரிசையில் நின்று பணம் எடுத்து செல்கின்றனர். தினமும் வங்கியில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து கிடக்கும் நிலை தான் உள்ளது.

சில்லறை இல்லை

நேற்று பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற கடைசி நாள் ஆகும்.இதனால் நேற்று பணம் எடுக்கவும் பழைய ரூ.500,ரூ.1000 நோட்டுகளை மாற்றவும் கரூர் நகரில் உள்ள அனைத்து வங்கிகளிலும் பொதுமக்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்து நின்றனர். இது குறித்து பொது மக்கள் கூறியதாவது:-கருப்பு பணம் ஒழிப்பதாக கூறி பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு 50 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இன்னும் தேவைக்கேற்ப போதிய பணம் வங்கியில் இருந்து எடுக்க முடியவில்லை. ரூ.2 ஆயிரம், ரூ.4 ஆயிரம் தான் வழங்கப்படும் என்று கூறுகின்றனர். அதுவும் ரூ.2 ஆயிரம் நோட்டுதான் வழங்குகிறார்கள். 100 ரூபாய் நோட்டு வரவில்லை என்று கூறுகின்றனர். இந்த 2 ஆயிரம் நோட்டை வாங்கிக்கொண்டு நாங்கள் மளிகை கடைக்கு சென்றால், அங்கு சில்லறை இல்லை என்று கூறி பொருள் தர மறுக்கின்றனர். காய் கறிக்கடையிலும் இதே நிலை தான்.

இன்னும் எத்தனை நாள் ஆகும்?

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நாள் முதல் இது வரை தேவையான காய்கறிகள் வாங்க முடியவில்லை. குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுக்க முடியவில்லை. தினமும் காலையில் வங்கியில் வந்து வரிசையில் காத்து நின்று பல மணி நேரத்திற்கு பிறகு தான் ரூ.2 ஆயிரம் எடுத்து செல்லும் நிலை இன்னும் உள்ளது. கரூரில் உள்ள அனைத்து ஏ.டி.எம். மையங்களும் இன்னும் மூடப்பட்டே உள்ளன. ஒரு சில மையங்கள் மட்டும் காலையில் 1 மணி நேரம், இரவில் 1 மணி நேரம் இயங்குகின்றன. அதில் வரிசையில் நிற்கும் பலர் பணம் இல்லாமல் திரும்பி செல்லும் நிலைதான் உள்ளது.ஒரு சில மையங்களில் திறக்கப்பட்டு காவலுக்கு காவலாளி ஒருவர் இருக்கிறார். மையம் திறந்து இருக்கிறதே பணம் எடுத்து செல்லாம் என்று அந்த மையம் அருகில் செல்லும் போது அங்கு உள்ள காவலாளி பணம் இல்லை என்று கூறுகிறார். பின்னர் எதற்கு அந்த மையத்தை திறந்து வைத்து அதற்கு காவலாளி போட்டு உள்ளனர். எனவே அதிகம் கஷ்டப்பட்டு வருகிறோம், என்று கூறினர். மேலும் 50 நாட்களுக்குள் நிலைமை சரியாகி விடும் அறிவித்தனர். ஆனால் சரியாகவில்லை. இந்த நிலைமை சரியாக இன்னும் எத்தனை நாள் ஆகும் என்ற கேள்வி எழுப்பி உள்ளனர்.

Next Story