ஜெயலலிதா இறந்த துக்கத்தில் வி‌ஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை


ஜெயலலிதா இறந்த துக்கத்தில் வி‌ஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 31 Dec 2016 5:06 AM IST (Updated: 31 Dec 2016 5:06 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டை அடுத்த வெங்கிடாபுரம் ஊராட்சி தெள்ளிமேடு கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் அஜித்குமார் (வயது 24). லாரி டிரைவர். அ.தி.மு.க. ஆதரவாளர் கடந்த 5–ந் தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதா இறந்தார் என்ற செய்தியை கேட்டது முதல் மன விரக்தியுடன் இருந்து

செங்கல்பட்டு,

செங்கல்பட்டை அடுத்த வெங்கிடாபுரம் ஊராட்சி தெள்ளிமேடு கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் அஜித்குமார் (வயது 24). லாரி டிரைவர். அ.தி.மு.க. ஆதரவாளர் கடந்த 5–ந் தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதா இறந்தார் என்ற செய்தியை கேட்டது முதல் மன விரக்தியுடன் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சோகம் தாங்காமல் பூச்சிமருந்து (வி‌ஷம்) குடித்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story