எட்டயபுரம் அருகே பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் விவசாயி திடீர் சாவு


எட்டயபுரம் அருகே பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் விவசாயி திடீர் சாவு
x
தினத்தந்தி 1 Jan 2017 2:30 AM IST (Updated: 31 Dec 2016 4:57 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் விவசாயி திடீரென்று உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– 40 ஏக்கரில்... தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள படர்ந்தபுளியைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது 44). விவசாயி. இவருடைய மனைவி கலைச்ச

எட்டயபுரம்,

எட்டயபுரம் அருகே பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் விவசாயி திடீரென்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

40 ஏக்கரில்...

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள படர்ந்தபுளியைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது 44). விவசாயி. இவருடைய மனைவி கலைச்செல்வி (29). இவர்களுக்கு ரிஷிகேஷ் (8) என்ற மகனும், பொன்லட்சுமி பிரியா (7) என்ற மகளும் உள்ளனர். அங்குள்ள பள்ளிக்கூடத்தில் ரிஷிகேஷ் 3–ம் வகுப்பும், பொன்லட்சுமி பிரியா 2–ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

சுப்பையா, அவருடைய சகோதரர்களான அயன்ராஜ், ரங்கசாமி ஆகிய அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். இவர்களுக்கு சொந்தமான சுமார் 40 ஏக்கர் மானாவாரி நிலத்தில் உளுந்து, பாசி பயறு பயிரிட்டனர். பயிர்களுக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்து வாங்குவதற்காக சுப்பையா சிலரிடம் கடன் வாங்கி செலவு செய்துள்ளார்.

பயிர்கள் கருகிய அதிர்ச்சியில்...

இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், அனைத்து பயிர்களும் தண்ணீரின்றி கருகின. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பையா, வாங்கிய கடனை எப்படி திரும்ப செலுத்துவது? என்று கூறி புலம்பியவாறு இருந்தார். அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தினர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் சுப்பையா தனது வீட்டில் தூங்கியபோது திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று காலையில் சுப்பையா படுக்கையில் பிணமாக கிடந்ததை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் விவசாயி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story