நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி கொள்ளைக்கார பெண்ணை பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்த கொள்ளைக்கார பெண்ணை பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
நெல்லை,

பட்டப்பகலில்...
நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூரை சேர்ந்தவர் தங்கமணி (வயது 70). இவர் நேற்று காலை சீதபற்பநல்லூரில் இருந்து நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்துக்கு டவுன் பஸ்சில் வந்து இறங்கினார். பஸ்சை விட்டு கீழே இறங்கிய போது அருகில் பர்தா அணிந்தவாறு ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். அவர் நைசாக தங்கமணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயற்சி செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கமணி கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறிக்க விடாமல் இறுக பற்றிக் கொண்டார். மேலும் கொள்ளைக்கார பெண்ணை தப்பவிடாமல் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார்.
போலீசில் ஒப்படைப்பு
இதனால் அங்கு நின்று கொண்டிருந்த சக பயணிகள் உடனடியாக கொள்ளைக்கார பெண்ணை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்து சந்திப்பு பஸ் நிலைய வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் வசம் ஒப்படைத்தனர்.
போலீசார், கொள்ளைக்கார பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் திருச்சி பகுதியை சேர்ந்த பெரியமருது மனைவி தங்கம்மாள் (30) என்று தெரிவித்தார். ஆனால் முன்னுக்கு பின் முரணாகவும் தகவல்களை தெரிவித்து போலீசாரை குழப்பினார்.
இதுகுறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குற்றப்பிரிவு போலீசார் புறக்காவல் நிலையத்துக்கு வந்து கொள்ளைக்கார பெண்ணையும், புகார் அளித்த தங்கமணியையும், அவருடன் வந்திருந்த மற்றொரு பெண்ணையும் டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.
தீவிர விசாரணை
அங்கு கொள்ளைக்கார பெண் தங்கம்மாளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அவர்கள் மீது வேறு எங்கேனும் திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளனவா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் பட்டப்பகலில் பெண்ணிடம், மற்றொரு பெண் நகை பறிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொது மக்கள் பீதி
நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த சில மாதங்களாக கொள்ளையர்களின் கைவரிசை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பட்டப்பகலில் காரில் இருந்த மடிக்கணினி திருட்டு, முன்னாள் எம்.பி.யின் உறவினரிடம் திருட்டு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவை திருச்சி ராம்ஜி நகர் கொள்ளை கும்பல் என்று தெரியவந்தும் அவர்களை பிடித்தபாடில்லை.
இந்தநிலையில் நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தை சுற்றிலும் போலீஸ் துறை சார்பில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதையும் மீறி நேற்று ஒரு பெண் பர்தா அணிந்து மாறு வேடத்தில் வந்து நகை பறிக்கும் துணிச்சலான சம்பவம் நடைபெற்றுள்ளது. இப்போது பிடிபட்டுள்ள கொள்ளைக்கார பெண்ணும் திருச்சி பகுதியை சேர்ந்த கொள்ளை கும்பலை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. இந்த கும்பல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லையில் முகாமிட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட வந்திருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story