செய்யாறில் பயங்கரம் வயலுக்கு சென்ற விவசாயி கழுத்தை அறுத்து கொலை போலீசார் விசாரணை
செய்யாறு அருகே விவசாயி ஒருவர் அவரது நிலத்திலேயே கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவசாயி கொலை செய்யாறு வெங்கட்ராயன்பேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). விவசாயி. இவருக்கு அதே பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலையில
செய்யாறு,
செய்யாறு அருகே விவசாயி ஒருவர் அவரது நிலத்திலேயே கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயி கொலைசெய்யாறு வெங்கட்ராயன்பேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). விவசாயி. இவருக்கு அதே பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் அந்த பகுதிக்கு சென்றவர்கள் ஆறுமுகம் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
தகவல் அறிந்த செய்யாறு போலீஸ் துணை சூப்பிரண்டு திவ்யா, இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்ததோடு அங்குள்ள பம்ப்செட் மின்வயர்களும் அறுந்து கிடந்தன.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆறுமுகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காரணம் என்ன?போலீசார் ஆறுமுகத்தின் வீட்டில் விசாரித்தபோது அவர் காலை 7 மணிக்குத்தான் வயலுக்கு சென்றதாக தெரிவித்துள்ளனர். எனவே அவரை கொலை செய்தவர்கள் அதனை திசைதிருப்புவதற்காக மின்வயரை அறுத்தார்களா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அந்த பகுதியில் உள்ள வயல்களில் இதுபோன்று மின்வயர்கள், மோட்டார்கள் திருடப்பட்டதாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் ஆறுமுகத்திற்கு எதிரிகள் யாரும் உள்ளனரா? யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? என அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் செய்யாறு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.