தர்மபுரி மாவட்டத்தில், இன்று ரேஷன் கார்டுகளில் உள்தாள் இணைக்கும் பணி தொடங்குகிறது
தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் உள்தாள் இணைக்கும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:– உள்தாள் இணைப்பு தர்மபுரி மாவட்டத்தில் தற்போது புழக்
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் உள்தாள் இணைக்கும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:–
உள்தாள் இணைப்புதர்மபுரி மாவட்டத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் புழங்கும் காலத்தை 1.1.2017 முதல் 31.12.2017 வரை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டித்து அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. இதன்படி ரேஷன் கார்டுகளை புதுப்பிக்கும் பணி ரேஷன் கடைகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி நடைபெற உள்ளது. எனவே குடும்ப தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ரேஷன்கடைக்கு ரேஷன்கார்டை எடுத்து சென்று 2017–ம் ஆண்டிற்கான உள்தாளை இணைத்து பெற்று கொள்ள வேண்டும்.
இதேபோல் ரேஷன் கடையில் பராமரிக்கப்படும் 2017–ம் ஆண்டிற்கான வழங்கல் பதிவேட்டில் கையொப்பம் இட வேண்டும். இடது கை பெருவிரல் ரேகையை பதிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கையொப்பமிட்டு, கைரேகையை பதித்தால் தான் ரேஷன் கார்டை புதுப்பித்தல் பணி முடிவுற்றதாக கருதப்படும். எனவே ரேஷன் கார்டுதாரர்கள் தங்களுடைய ரேஷன் கார்டை 2017–ம் ஆண்டிற்கு புதுப்பித்து கொள்வதுடன் இந்த பணி செம்மையாக நடைபெற தங்கள் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சுழற்சி முறையில்இந்த பணியில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 75 முதல் 100 ரேஷன் கார்டுகளை புதுப்பிக்க ரேஷன்கடை பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான விவரம் அந்தந்த ரேஷன் கடைகளில் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே ரேஷன் கார்டுதாரர்கள் தங்களுக்குரிய நாளில் ரேஷன்கடைக்கு சென்று உள்தாளை இணைத்து கொள்ளலாம்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் செல்ல முடியாதவர்கள் பொது நாளான சனிக்கிழமைகளில் உள்தாளை இணைத்து கொள்ளலாம். இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077–ஐ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.