கடத்தி கட்டாய திருமணம் செய்து பிளஸ்–1 மாணவியிடம் உல்லாசம்; தறித்தொழிலாளி கைது
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பவானி மெயின் ரோடு செட்டையன்காடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் பேத்தி(வயது16) சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். மாணவியின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் செல்வம்(29). தறித்தொழிலாளி. இவருக்கு திருமண
சங்ககிரி,
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பவானி மெயின் ரோடு செட்டையன்காடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் பேத்தி(வயது16) சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். மாணவியின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் செல்வம்(29). தறித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். பிளஸ்–1 மாணவியிடம் செல்வம் பழகி வந்தார். இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் 18–ந்தேதி செல்வம் ஆசைவார்த்தை கூறி மாணவியை திருப்பதிக்கு அழைத்துச்சென்று கோவிலில் கட்டாய திருமணம் செய்து கொண்டு அங்கேயே 2 நாட்கள் தங்கி இருந்தார். இதையடுத்து அவர் முன்பு வேலை செய்து வந்த முத்துநாயக்கன்பட்டிக்கு மாணவியுடன் வந்து தங்கி அங்குள்ள தறிப்பட்டறையில் வேலை செய்து வந்தார். அங்கு மாணவியை அவர் கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பேத்தியை செல்வம் கடத்தி சென்று விட்டதாக மாணவியின் பாட்டி சங்ககிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்தி கட்டாய திருமணம் செய்து உல்லாசமாக இருந்ததாக தறித்தொழிலாளி செல்வத்தை நேற்று கைது செய்தனர்.